பாகிஸ்தானிடம் அணு ஆயுதம்; சர்வதேச அமைப்புக்கு ராஜ்நாத் கேள்வி!

ஸ்ரீநகர்: ''பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதங்களை சர்வதேச அணு சக்தி முகமை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்'' என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில், ஆபரேஷன் சிந்தூர நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்களை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்தார். அவர்களுக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துகளை தெரிவித்தார். ராணுவ வீரர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பயங்கரவாதத்திற்கு எதிராக இன்னுயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குகிறேன்.
உறுதிமொழி
நான் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தாலும், முதலில் இந்திய குடிமகன். இந்திய குடிமகனாக உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எதிரிகளை அழித்த உங்களின் சக்தியை உணர வந்துள்ளேன். நேரம் வரும்போது கடினமான முடிவுகளை எடுப்போம் என்பதற்கான உறுதிமொழி தான் ஆபரேஷன் சிந்தூர். பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
அணு ஆயுதங்கள்
கடினமான சூழலில் உங்களுடன் இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். ராணுவத்தினருக்கு நாடே கடமைப்பட்டு உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்க எந்த எல்லைக்கும் செல்வோம். முரட்டுதனமான நாட்டிற்கு அணு ஆயுதம் தேவையா? பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பது பாதுகாப்பானதா? பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருப்பது குறித்து சர்வதேச அணு சக்தி முகமை பரீசிலனை செய்ய வேண்டும். அணு ஆயுதங்களை வைத்து கொண்டு பாகிஸ்தான் அச்சுறுத்துகிறது. பாகிஸ்தானின் அணு ஆயுத கிடங்குகளை சர்வதேச அணு சக்தி முகமை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்
நாடே பெருமிதம்
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் இடம் அணு ஆயுதம் இருப்பது குறித்து உலக நாடுகள் யோசிக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது. பதிலடி கொடுக்க தெரியும் என்பதை ஆபரேஷன் சிந்தூர் மூலம் நிரூபணமாகி உள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பயங்கரவாதிகளுக்கு விடப்பட்ட எச்சரிக்கை செய்தி.
இங்கு இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பிரதமர் மோடியின் தலைமையில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தியதற்காக முழு தேசமும் உங்கள் அனைவரையும் நினைத்து பெருமை கொள்கிறது. கடந்த 35-40 ஆண்டுகளாக, இந்தியா எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்கொண்டது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
ராணுவ வீரர்களுடன் சந்திப்பு!
காஷ்மீர் சென்றுள்ள ராணுவ தளபதி உபேந்திர திவேதி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றி அடைய செய்த ராணுவ வீரர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
ராணுவ வீர்கள் மத்திய பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லையில் இருந்து பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த வீரர்களை பாராட்டினார்.
எந்தவொரு சவாலுக்கும் தீர்க்கமான பலத்துடன் பதிலளிக்க, பாதுகாப்பு படை வீரர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என உபேந்திர திவேதி தெரிவித்தார்.



மேலும்
-
சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை!
-
பதற்றத்தை தணிக்க நடவடிக்கை; இந்தியா- பாக்., முடிவு
-
அறநிலையத்துறை இடத்துக்கு சீல் வைக்க முயற்சி; அதிகாரிகள், வியாபாரிகள் இடையே கைகலப்பு
-
'கிராண்ட் மாஸ்டர்' தமிழகத்தின் ஸ்ரீஹரி
-
92 வயது ஒய்வு பெற்ற டாக்டரிடம் ரூ.2.2 கோடி மோசடி: சைபர் குற்றவாளிகள் 2 பேர் கைது
-
ஒட்டகப் பந்தயம் அறிமுகம்: ஆசிய யூத் விளையாட்டில்