வக்ப் சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு: மே 20க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

புதுடில்லி: வக்ப் சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்குகளின் விசாரணையை மே 20ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.
வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக, காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், ஏராளமான முஸ்லிம் அமைப்புகள் என, 100க்கும் அதிகமான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள், வக்ப் வாரியம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர்.
இது தொடர்பாக, மத்திய அரசு விளக்கம் அளிக்க அவகாசம் கோரி இருந்தது. இந்த வழக்கு இன்று (மே 15) மீண்டும் தலைமை நீதிபதி கவாய் அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது. அப்போது, '' தற்போதைய சூழலில் வழக்கு விசாரணையை நீட்டிக்க வேண்டும். இடைக்கால உத்தரவு குறித்து வாதங்களை முன்வைக்க 2 மணி நேரம் வழங்கப்படும்'' என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து, வக்ப் சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்குகளின் விசாரணையை மே 20ம் தேதிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலை மையிலான அமர்வு ஒத்திவைத்தது.
மேலும்
-
ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
-
நிஹால் சரின் 2வது இடம்: ஆசிய செஸ் தொடரில்
-
ராகுல் மீது நடவடிக்கை : பீஹார் மாவட்ட நிர்வாகம் முடிவு
-
மாளவிகா, உன்னதி ஏமாற்றம்: தாய்லாந்து ஓபன் பாட்மின்டனில்
-
மோதலை நிறுத்தினேன் என சொல்ல விரும்பவில்லை: டிரம்ப் நிலையில் மாற்றம்
-
இந்திய விமான நிலையங்களில் செயல்பட்ட துருக்கி நிறுவனம்: அனுமதியை ரத்து செய்தது மத்திய அரசு