காந்தாரா பட நடிகர் திடீர் மரணம்; திருமண நிகழ்வில் சோகம்

17

கார்கலா; திருமண விழாவின் போது பிரபல கன்னட நடிகர் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



கன்னட திரையுலகின் பிரபல நடிகர் ராகேஷ் புஜாரி(33). காமெடி கிலாடி சீசன் 3 ஷோவின் வெற்றியாளர். காந்தாரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர். காந்தாரா படத்தின் 2ம் பாகத்திலும் தற்போது நடித்து வருகிறார்.


உடுப்பியில் திருமண விழா ஒன்றில் ராகேஷ் புஜாரி கலந்து கொண்டிருந்தார். விழாவில் தமது நண்பர்களுடன் அவர் மேடையில் உற்சாகம் பொங்க, நடனம் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நெஞ்சை பிடித்தபடியே சரிந்து விழுந்தார்.


இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்குள்ளோர் ராகேஷை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக கூறினர். ராகேஷ் புஜாரியின் மறைவை அறிந்த கன்னட சினிமா பிரபலங்கள் அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.

Advertisement