சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: நீண்ட காலமாக அரியர் வைத்துள்ளவர்கள் சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை அண்ணா. பல்கலை. அறிவித்துள்ளது.



அண்ணா பல்கலை. இணைப்பு மற்றும் அதன் கீழ் தொலைநிலைக் கல்வி மூலம் பொறியியல் பட்டப்படிப்பு பயின்ற் மாணவர்களில் பலர் இன்னமும் அரியர் வைத்துள்ளனர். நீண்ட காலமாக அரியர் வைத்துள்ள அவர்களுக்கு என சிறப்பு அரியர் தேர்வு அறிவிப்பை அண்ணா பல்கலை. வெளியிட்டு இருக்கிறது.


குறிப்பிட்ட கால உச்சவரம்பை கடந்து அரியர் வைத்திருப்போர் ஏப்-மே 2025 சிறப்புத் தேர்வு, ஜூன்-ஜூலை 2025 சிறப்புத் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தேர்வு எழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை பொறுத்தே தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அண்ணா பல்கலை. தெரிவித்துள்ளது.


அரியர் வைத்துள்ளவர்கள் http://coe1.annauniv.edu என்ற இணைய தளத்தில் மே 17க்குள் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். தேர்வு அட்டவணை, மையங்கள் குறித்த விவரங்கள் மே 27க்கு பின்னர் அறிவிக்கப்படும்.

Advertisement