முடிவுக்கு வந்தது வர்த்தக போர்; பரஸ்பர வரிகளை குறைக்க சீனா, அமெரிக்கா ஒப்புதல்!

வாஷிங்டன்: வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலும், 90 நாட்களுக்கு பரஸ்பர வரிகளை அமெரிக்கா, சீனா ஆகிய இருநாடுகளும் திரும்ப பெற ஒப்புக்கொண்டன. அதேநேரத்தில் பரஸ்பர வரிகளை குறைக்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற போதே தங்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார். அடுத்தடுத்து சீனாவுக்கு வரி மேல் வரி போட்டார். சீனாவும் பதிலுக்கு வரி போட துவங்கியது. இதனால் அமெரிக்கா சீனாவின் பொருட்களுக்கு இறக்குமதி வரியை 145% ஆக அதிகரித்தது.
சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை, 125 சதவீதமாக உயர்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் உச்சத்தில் இருந்தது. இந்நிலையில், தற்போது வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலும், 90 நாட்களுக்கு பரஸ்பர வரிகளை திரும்ப பெற சீனா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் ஒப்புக்கொண்டன.
மேலும், அமெரிக்கா சீனப் பொருட்களுக்கான வரிகளை 145 சதவீதத்தில் இருந்து, 30 சதவீதமாக குறைக்கவும், சீனா அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடந்த வர்த்தகம் தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்பட்டு உள்ளது.




மேலும்
-
பிரதமர் அலுவலக அதிகாரி என நாடகம்; ஐ.என்.எஸ்., போர்க்கப்பல் விவரம் கேட்ட கேரள நபர் கைது
-
10 நாட்கள் நடைபெறும் 'ஆபரேஷன் சிந்தூர்' சாதனை திரங்கா யாத்திரை: பா.ஜ., திட்டம்
-
எகிறிய பங்குச்சந்தைகள்: சென்செக்ஸ் 3000 புள்ளிகள் அதிகரிப்பு
-
உ.பி.,யில் பிறந்த 17 குழந்தைகளுக்கு சிந்துார் என பெயர் சூட்டி மகிழ்ந்த பெற்றோர்
-
வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறை: மக்களுக்கு ராணுவம் எச்சரிக்கை
-
சென்னையில் பிரபல துணிக்கடையில் திடீர் தீ; அலறி ஓடிய ஊழியர்கள், பொதுமக்கள்