வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறை: மக்களுக்கு ராணுவம் எச்சரிக்கை

புதுடில்லி: "வாட்ஸ் அப்பில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் போல் நடித்து பாகிஸ்தான் உளவுத்துறையினர் தகவல்களை பெற முயற்சி செய்வதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
@1brகாஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக மே 7ம் தேதி அதிகாலையில் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் இந்திய ராணுவம் தரைமட்டமாக்கியது.
இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தது. மே 10ம் தேதி மாலை 5 மணியில் இருந்து போர் நிறுத்தம் அமல் ஆனது.
இந்நிலையில் "வாட்ஸ் அப்பில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் போல் நடித்து பாகிஸ்தான் உளவுத்துறையினர் தகவல்களை பெற முயற்சி செய்வதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியதாவது:
* அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையை சேர்ந்தவர்கள் என்று கூறி, எந்த நபர் தொடர்பு கொண்டாலும் எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
* 7340921702 என்ற வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
* இந்த எண்ணை இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் போல் வேடமிட்டு செயல்படும், பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகள் பயன் படுத்துகின்றனர்.
* பாகிஸ்தான் உளவாளி இந்திய பத்திரிகையாளர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, பாதுகாப்பு அதிகாரியாக நடித்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்து தகவல்களைப் பெற முயற்சிக்கிறார்கள். இவ்வாறு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து (1)
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
12 மே,2025 - 19:05 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement