உ.பி.,யில் பிறந்த 17 குழந்தைகளுக்கு சிந்துார் என பெயர் சூட்டி மகிழ்ந்த பெற்றோர்

1

குஷிநகர்: பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரால் ஈர்க்கப்பட்டு, உ.பி., மாநிலத்தில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு சிந்தூர் என்று பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு-காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழிக்க இந்திய ராணுவம் மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் தொடங்கியது.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மருத்துவக் கல்லூரியில் மே 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்களில் பிறந்த 17 புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிந்தூர் என்று பெயரிட்டுள்ளனர். இந்த தகவலை அந்த மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஆர்.கே. ஷாஹி கூறினார்.

இது குறித்து குஷிநகரைச் சேர்ந்த பெண் குழந்தையை பெற்றெடுத்த தாய் அர்ச்சனா ஷாஹி கூறியதாவது:

பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்ததற்காக, இந்திய ஆயுதப்படைகளைப் பாராட்டி, என் மகளுக்கு ராணுவ நடவடிக்கையின் பெயரைச் சூட்டினேன்.
இதைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். இப்போது, ​​சிந்தூர் என்பது ஒரு வார்த்தை அல்ல, ஒரு உணர்ச்சி. எனவே எங்கள் மகளுக்கு சிந்தூர் என்று பெயரிட முடிவு செய்துள்ளோம் என்றார்.

அவரது கணவர் அஜித் ஷாஹி கூறுகையில். எங்கள் மகள் பிறப்பதற்கு முன்பே அர்ச்சனாவும் நானும் அந்தப் பெயரைப் பற்றி யோசித்தோம். இந்த வார்த்தை எங்களுக்கு ஒரு உத்வேகம் என்று அவர் கூறினார்.

Advertisement