ஆலமரம் முறிந்து விழுந்து பெண்கள் 2 பேர் உயிரிழப்பு

2

திருவண்ணாமலை: செய்யாறு அருகே ஆலமரம் முறிந்து விழுந்து பெண்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, கழனிப்பாக்கத்தில் நிழலுக்காக அமர்ந்தவர்கள் மீது ஆலமரக்கிளை முறிந்து விழுந்தது. இந்த விபத்தில் அன்னபூரணி (60), வேண்டா (55) ஆகிய இரு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.


இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement