மக்கள் குறைதீர் கூட்டம் 355 மனுக்கள் ஏற்பு
காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமைில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பட்டா, உதவித்தொகை, ஆக்கிரமிப்பு, ரேஷன் அட்டை, நிலம் தொடர்பான பிரச்னை, வேலைவாய்ப்பு என, பல்வேறு வகையிலான கோரிக்கைககள் தொடர்பாக, 355 பேர் மனு அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், முன்னாள் படைவீரர் கொடி நாள் 2022ம், மூன்று லட்சம், ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் நிதி வசூல் செய்த அலுவலர்களுக்கு, கவர்னர் மற்றும் தலைமைச் செயலரின் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் கலைச்செல்வி வங்கி பாராட்டினார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் வாயிலாக மகளிர் சுயத்தொழில் தொடங்குவதற்கு 60 மகளிர் பயனாளிகளுக்கு 12 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைக்கான காசோலைகளை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.