இ.பி.எஸ்., பிறந்த நாள் கொண்டாட்டம்

ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மேற்கு ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில், அத்திமுகம் கிராமத்தில் கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பிறந்த நாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. துணை பொதுச்செயலாளர் முனுசாமி தலைமையில், ஐராவதீஸ்வரர் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு வெங்கடாசலம், மத்திய ஒன்றிய செயலாளர் மாதேஷ், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் செல்வம், மாவட்ட பொருளாளர் மல்லையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


* கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், மாவட்ட மாணவரணி செயலாளர் ராகுல் தலைமையில், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் அன்னதானம் வழங்கினார். மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னரசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
* போச்சம்பள்ளி, குள்ளனுாரில் உள்ள பாலமுருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புடவை, அன்னதானம் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் திருமால், எம்.எல்.ஏ., அசோக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

* தர்மபுரி மாவட்டம், அரூரில், இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. அரூர் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார் ஏற்பாட்டில் நடந்த முகாமிற்கு, ஒன்றிய செயலாளர் பசுபதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான அன்பழகன் முகாமை துவக்கி வைத்தார். பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., கோவிந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்


.* பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில், ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் நல்லதம்பி, நகர செயலாளர் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.,--கோவிந்தசாமி, 1,000 பேருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கினார்.

Advertisement