ஆத்துார் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
ஆத்துார் :சேலம் மாவட்டம், ஆத்துார், அம்மம்பாளையத்தில் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவி ஹரிதர்ஷினி, 600க்கு 586 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்றார்.
மாணவியர் அபிநயா, அஸ்விகா ஆகியோர் தலா, 585 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், மாணவர் ராஜசூர்யா, 584 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பெற்றார்.
தமிழ் பாடத்தில் இருவர், கணிதத்தில் மூவர், கணினி அறிவியலில் 11 பேர், கணினி பயன்பாடுகள் இருவர், கணக்கு பதிவியலில் இருவர், வணிகவியலில் ஒருவரும், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவியரை பள்ளி தலைவர் பாலகுமார், செயலர் வரதராஜன், தாளாளர்கள் முகமது ஈசாக், கண்ணன், இயக்குனர் விஸ்வநாதன், முதல்வர் சுகந்தி ஆகியோர் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement