எஸ்.எஸ்.வி., பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுதேர்வில் சாதனை
மேட்டூர் :பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில், மேச்சேரி, குட்டப்பட்டி எஸ்.எஸ்.வி., பள்ளி மாணவர் ஓபுளி பிரசாந்த், 595 மதிப்பெண்கள், மாணவி சுருதி, 589, கலைசெல்வி, 587 மதிப்பெண்கள் பெற்று, முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்தனர்.
பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய, 148 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். இதில், தமிழில் ஒருவர், ஆங்கிலத்தில், 5 பேர், கணிதத்தில், 2 பேர், இயற்பியலில், 2 பேர், வேதியியலில் ஒருவர், கணினி அறிவியலில், 5 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றனர்.
சிறப்பாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவியரை பள்ளி தலைவர் கூத்தப்பன், தாளாளர் தனசேகரன், செயலாளர் சண்முகம், முதல்வர் சதீஷ்குமார், ஆசிரியை, ஆசிரியர்கள் பாராட்டினர்.