தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது

சேலம் :சேலம், கருங்கல்பட்டி பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன், 35, கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு ஒன்பதாம் பாலி என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மூனாங்கரட்டை சேர்ந்த கார்த்தி, 30, ரவுடி மணிமாறன், 34, ஆகியோர் வழி மறித்து தகராறு செய்தனர். பின், இருவரும் கட்டையால் சீனிவாசனை தாக்கினர்.


இதில் படுகாயமடைந்த சீனிவாசன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்னதானப்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், சீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் கார்த்திக்கின் தாய் ஆடுகளை மேய்க்க சென்றபோது, கண்டித்ததால் அவரை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement