கோட்டை மாரியம்மன் கோவிலில் பெண்கள் திருவிளக்கு பூஜை
சேலம் :சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் மாதம்தோறும் பவுர்ணமியன்று, 108 சுமங்கலி பெண்கள் கலந்து கொள்ளும் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று மதியம், 12:00 மணிக்கு மூலவர் மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபி ேஷகம் செய்து சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
மாலை, 4:00 மணிக்கு நாட்டியப்பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு நடந்த திருவிளக்கு பூஜையில் திரளான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பெண்களின் பக்தி பாடல் பஜனையுடன் அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு 7:00 மணிக்கு ஓம் சக்தி பராசக்தி கோஷங்கள் முழங்க பக்தர்கள் தங்க ரதம் இழுத்து கோவிலை வலம் வந்தனர்.
மாநகராட்சியில்
இன்று குடிநீர் 'கட்'
சேலம், மே 13