இ.எஸ்., இன்ஜி., கல்லுாரி ஆண்டு விழா

விழுப்புரம், மே 13-

விழுப்புரம் இ.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது.

கல்லுாரி தாளாளர் செல்வமணி தலைமை தாங்கினார். முதல்வர் இந்திரா ஆண்டறிக்கை வாசித்தார். செயலாளர் பிரியா செல்வமணி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, அண்ணா பல்லைக்கழகம் 2024ம் ஆண்டு தேர்வில் 95 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் அணிவிக்கப்பட்டது.

மேலும், கல்லுாரியில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் கல்வியாண்டில் நுாறு சதவீதம் வருகை பதிவு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

விழாவில், உறுப்பு கல்லுாரி முதல்வர்கள் ஆமோஸ் ராபர்ட் ஜெயச்சந்திரன், செந்தில் முருகன், ராமு உட்பட துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

Advertisement