போர் பதற்றத்தால் மூடப்பட்ட விமான நிலையங்கள் திறப்பு

புதுடில்லி : இந்தியா -- பாக்., போர் பதற்றம் காரணமாக, நம் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி மாநிலங்களில் உள்ள 32 விமான நிலையங்களில், 15ம் தேதி வரை விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப் பட்டது.

இந்த நிலையில், இந்தியா நடத்திய பதில் தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்தும்படி சமரச பேச்சுக்கு அழைப்பு விடுத்தது.

இதன்படி, கடந்த 10ம் தேதி மாலை 5:00 மணி முதல் போர் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து சண்டிகர், ஸ்ரீநகர், ஜம்மு, குலு மணாலி, லே, பதான்கோட், பாட்டியாலா உள்ளிட்ட மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் நேற்று காலை முதல் மீண்டும் செயல்படத் துவங்கின.

Advertisement