திருவக்கரை கோவிலில் 1008 பால் குட ஊர்வலம்

வானுார் : திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவிலில் சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு, 1008 பால் குடங்களை பெண்கள் ஊர்வலமாக எடுத்து சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

வானுார் அடுத்த திருவக்கரை வக்கிரகாளியம்மன், சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக, கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், வரதராஜ பெருமாள், சந்திரமவுலீஸ்வரர், குண்டலி மாமுனி, வக்கிரகாளியம்மன், வக்கிர சனி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் 1,008 பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement