இந்தோனேசியாவில் வெடிகுண்டு வெடித்து 13 பேர் பலி

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் ராணுவ வீரர்கள் 4 பேர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.


இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணம், கருத் மாவட்டத்தின் சாகரா கிராமத்தில், ராணுவ கிடங்கில் நீண்டகாலமாக சேமிக்கப்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த வெடிபொருள்களை அழிக்கும் பணி நடந்தது.


அப்போது எதிர்பாராத வகையில் விபத்து நடந்துள்ளது. வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின் போது வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் 9 பேர், நான்கு இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



வெடிபொருள் அழிப்பு நடவடிக்கையின் போது உரிய விதிமுறைகள் பின்பற்றப் பட்டனவா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement