மத்திய அரசு மறுப்பு

மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

ஆப்பரேஷன் சிந்துார் தொடர்பாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், நம் பிரதமர் மோடியிடம் கடந்த 9ம் தேதி பேசினார். அப்போது, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் தொடர்பாக விவாதிக்கவில்லை.

இதேபோல் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் 8 மற்றும் 10ம் தேதியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் 10ம் தேதி பேசியபோதும் அந்நாட்டுடனான வர்த்தகம் தொடர்பாக விவாதிக்கவில்லை.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement