வீரவாழி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

விழுப்புரம் : விழுப்புரம் வீரவாழி மாரியம்மன் கோவிலில், 59ம் ஆண்டு சித்ரா பவுர்ணமியொட்டி விளக்கு பூஜை நடந்தது.
விழுப்புரம் நேருஜி சாலை வீரவாழி மாரியம்மன் கோவிலில், 59வது ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா, கடந்த 8 ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
தொடர்ந்து 108 சங்காபிஷேகம், நேற்று முன்தினம் மாலை கலச ஸ்தாபனம், விளக்கு பூஜை நடந்தது. இதில், பெண் பக்தர்கள் விளக்கேற்றி பூஜை செய்து சுவாமியை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வேலவன் செய்திருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement