டி.கல்லுப்பட்டியில் மாரியம்மன் கோயில் திருவிழா

டி.கல்லுப்பட்டி : டி.கல்லுப்பட்டி புது மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 4 நாட்களாக நடந்தது.
சக்தி மாலை நிகழ்ச்சியுடன் தொடங்கி கொடியேற்றம், காப்பு கட்டுதல், கணபதி ஹோமம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
நேற்று மாலை டி.கல்லுப்பட்டி, வன்னி வேலம்பட்டி, சத்திரப்பட்டி, காரைக்கேணி, அம்மாபட்டி பகுதி பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் பல்வேறு வேடங்கள் அணிந்து வந்திருந்தனர். கடவுள்கள், பெண் வேடங்கள், சித்தர்கள், பூதங்கள், காட்டுவாசிகள், ஆப்பரேஷன் சிந்துாரை நினைவூட்டும் வகையிலான வேடங்கள் என பலவாறு வேடமிட்டு கோயில் முன்பு ஒன்று கூடினர்.
ஒவ்வொருவரும் தங்களுக்கு வாகனங்களை ஏற்படுத்தி அதில் அமர்ந்து கொண்டனர். கோயிலில் இருந்து பஸ்ஸ்டாண்ட் நிலையம் வரை ஊர்வலமாகச் சென்று பின்னர் கோயிலை வந்து அடைந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி துர்கா தேவி தலைமையில் போலீசார் செய்தனர்.