திண்டுக்கல்லில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்

திண்டுக்கல், : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் நடந்தது.

திண்டுக்கல் மலைக்கோட்டை கோயிலில் மூலவர் சிலைகள் இல்லாதபோதிலும் ஒவ்வொரு பவுர்ணமியின்போது பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.

அதன்படி சித்ரா பவுர்ணமியான நேற்று திண்டுக்கல் மலைக்கோட்டை ஸ்ரீ அபிராமி அம்மன் ஸ்ரீ பத்மகிரீஸ்வரர் ஆலய பாதுகாப்பு பேரவை, ஹிந்து முன்னணி அமைப்புகள் சார்பில் கிரிவலத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றனர். பேரவை சார்பில் சிறப்பு பூஜை நடக்க பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

நடிகர் ரஞ்சித், ஹிந்து முன்னணி மாநில செயலர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.

3 கி.மீட்டர் தொலைவு கிரிவலப் பாதையில் அமைந்துள்ள 8 சிவாலயங்கள் உட்பட 22 திருக்கோயில்களிலும் கிரிவலம் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

Advertisement