4 ஆண்டுகளில் ரூ.101.28 கோடி உதவி

திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் 4 ஆண்டுகளில் 90 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.101.28 கோடி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்.குமார் நேற்று ஆய்வு செய்தார். தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசித்தார்.

அப்போது அவர், ''மாவட்டத்தில் 1.52 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். 2021 முதல் இது வரை 90 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.101.28 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 66 ஆயிரத்து 404 புதிய உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்,'' என்றார்.

12 நல வாரிய உறுப்பினர்களுக்கு திருமணம், ஓய்வூதியம் என, ரூ.1.68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

Advertisement