பரமக்குடி அருகே பார்த்திபனுாரில் ரூ.6.93 கோடியில் உயர்மட்ட பாலம்

பரமக்குடி: பரமக்குடி அருகே பார்த்திபனுாரில் ரூ.6 கோடியே 93 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நடக்கிறது.

இதன்படி ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, பார்த்திபனுார் ரோட்டில் இந்த பாலம் பணிகள் நடக்கிறது.

இப்பணியை சேலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் தலைமையில் குழுவினர் பார்வையிட்டனர்.

அப்போது பாலத்தின் தரம், கனம் மற்றும் அகலம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

ஆய்வில் தென்காசி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் சுரேஷ்பாபு, ஸ்ரீவில்லிபுத்துார் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் ரவி மற்றும் தரக்கட்டுப்பாடு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement