இன்னும் 33 நாட்களே: ராமேஸ்வரத்தில் படகுகள் பழுது மராமத்து மும்முரம்

ராமேஸ்வரம்: மீன் பிடிக்க தடை காலம் முடிய இன்னும் 33 நாட்கள் உள்ளதால், ராமேஸ்வரத்தில் படகுகளில் மராமத்து செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது.
மீன்கள் இனப் பெருக்கத்திற்கு ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல தமிழக அரசு தடை விதித்தது. இதனால் தமிழகத்தில் 8000 படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு மீனவர்கள் வேலை இன்றி வீடுகளில் முடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தடைக்காலம் முடிய இன்னும் 33 நாட்கள் உள்ள நிலையில், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் 400 படகில் சேதமடைந்த மரப்பலகையை புதுப்பித்தும், பழுதான இன்ஜின் பாகங்களை சரி செய்யும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இதனால் ராமேஸ்வரம் கடலோரத்தில் உள்ள லேத், பட்டறைகள் செயல்பட துவங்கியது. தடை காலத்திற்கு முன்பு இலங்கை கடற்படை கெடுபிடியால் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை.
இதனால் படகுகளில் மராமத்து செய்ய தனியாரிடம் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
மேலும்
-
பணி அனுபவ சான்றிதழ் வழங்க ரூ 60 ஆயிரம் லஞ்சம்; கல்வி அலுவலர் கைது
-
மேயர் வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை:மெக்சிகோவில் பதற்றம்
-
பொள்ளாச்சி வழக்கில் தண்டனை அறிவிப்பு; தலைவர்கள் கருத்து!
-
அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவக்கம்; தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!
-
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'