பேச்சுப்போட்டி

மேலுார் : மேலுாரில் பாரதிதாசன் பயிற்சி குடில் அகாடமி, இளைஞர்கள் வெற்றிப் பயணம் சார்பில் மாநில பேச்சுப்போட்டி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் வரவேற்றார்.

தாளாளர் ஜீவா தலைமை வகித்தார். அமைப்பின் செயலாளர் சூர்யா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு கல்வி இயக்கம் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் கர்ணன், தமிழாசிரியர் சேவுகமூர்த்தி, சிவராமன், திருமாறன் பேசினர். மாணவிகள் யாழினி, மகாபரணி, சண்முக ஹரி, துர்கா முதல் 5 பரிசு பெற்றனர். பங்கேற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. சமூக செயற்பாட்டாளர் கல்லாணை சுந்தரம் நன்றி கூறினார்.

Advertisement