வாலிபரை சரமாரியாக தாக்கிய மூன்று பேருக்கு போலீசார் வலை; மூலக்குளம் அருகே பரபரப்பு

புதுச்சேரி: பைக்கில் கத்தியுடன் வந்து 3 போர் கொண்ட கும்பல், வாலிபரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மூலக்குளம் அடுத்த பிச்சைவீரன்பேட்டையை சேர்ந்தவர் கிட்டையன்,26; இவர் அருகே தனியார் பெட்ரோல் பங்கு பகுதியில், நேற்று மாலை 7:00 மணியளவில், வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 3 வாலிபர்கள், நின்று கொண்டிருந்த வாலிபரை சுற்றி வளைத்து தாக்கினர். தப்பியோட முயன்ற வாலிபரை மூவரும் விரட்டி சென்று தாக்கினர்.

அப்போது, பைக் ஆசாமிகளிடம் இருந்து ஒன்னரை அடி நீளம் கொண்ட சூரிக் கத்தி கீழே விழுந்தது. இதை கண்ட அங்கிருந்த மக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். பின்னர் அந்த வாலிபரை மூவரும் சேர்ந்து, தங்கள் பைக்கில் கடத்தி சென்று சரமாரியாக தாக்கி, கீழே தள்ளிவிட்டு சென்றனர். தகவல் அறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் கிட்டையனை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இது குறித்துரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்த 3 பேரையும் தேடிவருகின்றனர்.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், வாலிபரை ஓட, ஓட விரட்டி தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement