சித்தர் முத்துவடுகநாதர் பாலாபிஷேக விழா

சிங்கம்புணரி :சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுகநாதர் பாலாபிஷேகத் திருவிழா நடந்தது.
200 ஆண்டுகளுக்கு முன் மன்னர் குடும்பத்தில் பிறந்து, இடம்பெயர்ந்து சிங்கம்புணரியில் மக்களோடு வாழ்ந்து பல்வேறு சித்துக்கள் மூலம் நன்மை புரிந்தவர் சித்தர் முத்து வடுகநாதர். இவர் உயிரோடு ஜீவசமாதி அடைந்த இடத்தில் கோயில் எழுப்பப்பட்டு வழிபாடு நடக்கிறது.
இக்கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று பாலாபிஷேகத் திருவிழா நடந்தது. சிங்கம்புணரி வணிகர் நலச் சங்கம் சார்பில் காலை 8:00 மணிக்கு சீரணி அரங்கம் அருகே இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோயிலை அடைந்தது.
ஏராளமான பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு மின்மோட்டார் மூலம் சித்தருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5:00 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பணி அனுபவ சான்றிதழ் வழங்க ரூ 60 ஆயிரம் லஞ்சம்; கல்வி அலுவலர் கைது
-
மேயர் வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை:மெக்சிகோவில் பதற்றம்
-
பொள்ளாச்சி வழக்கில் தண்டனை அறிவிப்பு; தலைவர்கள் கருத்து!
-
அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவக்கம்; தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!
-
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'
Advertisement
Advertisement