ரோடுகளில் சிதறும் குப்பை: வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கை : சிவகங்கையில் சேகரிக்கப்படும் குப்பைகளை எடுத்து செல்லும் டிராக்டர்களை தார்பாய் கொண்டு மூடாமல் விடுவதால் ரோட்டில் குப்பை சிதறி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

சிவகங்கை நகராட்சி பகுதியில் உள்ள 27 வார்டுகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை பொதுமயானம், காளவாசல், மருதுபாண்டியர் நகர் குடிநீர் தொட்டி பகுதியில் தரம்பிரிக்கின்றனர். இதற்காக நகரில் வீடுகள் தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை டிராக்டரில் எடுத்து செல்கின்றனர்.

இக்குப்பை உள்ள டிராக்டர்களை தார்பாய் கொண்டு மூடுவதில்லை. இதனால், குப்பைகள் ரோட்டில் சிதறி விழுகின்றன. இதில், கழிவுகளும் விழுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

Advertisement