மந்தை மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு மந்தை மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா நேற்று நடந்தது.
இக்கோயிலில் மே 1ல் கொடியேற்றத்துடன் பூக்குழி திருவிழா துவங்கியது. தினமும் வெவ்வேறு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது.
நிறைவு நாளான நேற்று பூக்குழி திருவிழா நடந்தது அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது. பின்னர் கோயில் முன்பு அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் தீ வளர்ப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனாக எண்ணெய் ஊற்றி வழிபட்டனர்.
பின்னர் காப்பு கட்விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். மாலை 4:30 மணிக்கு அக்னி குண்டத்தில் தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை திருவிழா கமிட்டினர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!
-
அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
-
பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்
-
சோபியானில் மீண்டும் துப்பாக்கிச்சத்தம்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்
Advertisement
Advertisement