ஊழியர் சங்க பேரவை கூட்டம் 

சிவகங்கை : காளையார்கோவிலில்டாஸ்மாக் ஊழியர் சங்க பேரவை கூட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் திருமாறன் தலைமை வகித்தார். செயலாளர் குமார் வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் பாண்டி வரவு செலவு அறிக்கை வாசித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட பொது செயலாளர் சேதுராமன் துவக்கி வைத்தார்.

மாநில தலைவர் முருகன், மின் ஊழியர் மத்தியகூட்டமைப்பு மாநில செயலாளர் உமாநாத், மாநில துணை தலைவர் தனுஷ்கோடி, மாநில துணை செயலாளர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சம்மேளன பொது செயலாளர் திருச்செல்வம் நிறைவுரை ஆற்றினார்.

புதிய மாவட்ட தலைவராக குமார், செயலாளர் திருமாறன், பொருளாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் தேர்வாகினர். 22 ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை நிர்வாகத்தில் பின்பற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.

Advertisement