சிறுமி திருமணம் 4 பேர் மீது போக்சோ
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் ராஜ்கிரண், 30; இவர், 17 வயது சிறுமியை, கடந்த 2023ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். தற்போது கர்ப்பமாக உள்ள சிறுமி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, பரிசோதித்த டாக்டர் 18 வயது பூர்த்தியடையாத சிறுமி என்பது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மகளிர் ஊர்நல அலுவலர் பஞ்சவர்ணம் அளித்த புகாரின் பேரில், சிறுமியை திருமணம் செய்த ராஜ்கிரண், இவரது தந்தை கணேசன், தாய் மல்லிகா, சிறுமியின் தாய் உட்பட 4 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பணி அனுபவ சான்றிதழ் வழங்க ரூ 60 ஆயிரம் லஞ்சம்; கல்வி அலுவலர் கைது
-
மேயர் வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை:மெக்சிகோவில் பதற்றம்
-
பொள்ளாச்சி வழக்கில் தண்டனை அறிவிப்பு; தலைவர்கள் கருத்து!
-
அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவக்கம்; தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!
-
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'
Advertisement
Advertisement