பாலாஜி ஜவுளி ஸ்டோர்ஸ் குறிஞ்சிப்பாடியில் திறப்பு  

பண்ருட்டி : குறிஞ்சிப்பாடியில் ஸ்ரீபாலாஜி ஜவுளி ஸ்டோர்ஸ் பெரியவர் கடை புதிய ஏசி ஷோரூம் திறப்பு விழா நடந்தது.

பண்ருட்டி ஸ்ரீ பாலாஜி ஜவுளி ஸ்டோர்ஸ் பெரியவர் கடை மற்றும் கடலுார் எஸ்.பி., டெக்ஸ் ஆகியவற்றின் புதிய கிளை குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகில் பெருமாத்தூரான் வீதியில் 3 மாடி கட்டடத்தில் குளிர்சாதன வசதியுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.

புதிய ஷோரூமை நிறுவனர் ஜெயபால் தலைமை தாங்கி திறந்து வைத்தார். பெரியவர் கடை உரிமையாளர் சுகுமார் காந்தி, சுதா சுகுமார்காந்தி, கிஷோர பாலாஜி வரவேற்றனர். முதல் விற்பனையை ஆடிட்டர் ரவிச்சந்திரன் பெற்றுக் கொண்டார். விழாவில், கணக்காளர் சிவக்குமார், ஜெ.கே.ஆர்., டெக்ஸ் அதிபர் ரமேஷ் காந்தி, கிருஷ்ணா மகால் உரிமையாளர் கிருஷ்ணகுமார், பத்மாவதி ஏஜன்சி மூர்த்தி, சுரேஷ்காந்தி, ஐஸ்வர்யா ஹோம் நீட்ஸ் ராஜ்மோகன், தொழிலதிபர்கள் மகேந்திரன், சாமிநாதன், சன் பில்டர்ஸ் சதீஷ், தேவி டிஜிட்டல் கலியபெருமாள், மகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement