புகார் பெட்டி கள்ளக்குறிச்சி
குரங்கு தொல்லையால் அவதி
சங்கராபுரம் பகுதியில் குரங்குகள் தொல்லையால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-ராமன், சங்கராபுரம்.
நிழற்குடை தேவை
கள்ளக்குறிச்சி அடுத்த காரனுார் பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபாகரன், காரனுார்.
போக்குவரத்து பாதிப்பு
சங்கராபுரம் கடைவீதியில் நாள்தோறும் நிலவும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருவதால் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
- கோபால், சங்கராபுரம்.
மின்விளக்குகள் அமைக்கப்படுமா?
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் பொருட்டு சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ், மூங்கில்துறைப்பட்டு.
ஏரியில் ஆபத்தான குளியல்
மூங்கில்துறைப்பட்டு அடுத்த கடுவனுார் ஏரியில் ஆபத்தான வகையில் குளிக்கும் சிறுவர்களை எச்சரிக்கும் வகையில் விழிப்புணர்வு பலகை அமைக்க வேண்டும்.
-மதியழகன், கடுவனுார்.
மேலும்
-
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!
-
அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
-
பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்
-
சோபியானில் மீண்டும் துப்பாக்கிச்சத்தம்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்