குறிச்சி பெரியநாச்சி அம்மனுக்கு சித்திரை பொங்கல் விழா

மானாமதுரை : மானாமதுரை அருகே குறிச்சி கிராமத்தில் உள்ள வழிவிடு பெரியநாச்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
மானாமதுரை-பரமக்குடி ரோட்டில் உள்ள குறிச்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வழிவிடு பெரிய நாச்சி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை பவுர்ணமி திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான விழா மே 1ம் தேதி காப்பு கட்டுடன் துவங்கியது. இதனைத்தொடர்ந்து தினம் தோறும் பெரிய நாச்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள காசிவிஸ்வநாதர், அனுமன் சன்னதிகளில் அபிஷேக ஆராதனைகள், திருவிளக்கு பூஜை நடைபெற்றன.
பொங்கல் விழாவை முன்னிட்டு காப்புகட்டி விரதமிருந்த பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் காவடிகள் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!
-
அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
-
பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்
-
சோபியானில் மீண்டும் துப்பாக்கிச்சத்தம்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்
Advertisement
Advertisement