வீட்டில் புகுந்த ராட்சத முதலை சிதம்பரம் அருகே மக்கள் பீதி

காட்டுமன்னார்கோவில் : குமராட்சியில் வீட்டிற்குள் புகுந்த முதலையை இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலப்பன். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில், வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த போது, நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தார்.
அப்போது, வீட்டு வராண்டாவில், 100 கிலோ எடை கொண்ட முதலை ஒன்று, ஊர்ந்து வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்த முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ்வாணன், இளைஞர்கள் கமலக்கண்ணன், ராஜமலைசிம்மன், வினோத், குமார், ராமஜெயம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து முதலையை லாவகமாக பிடித்து பாதுகாப்பாக கட்டினர்.
தொடர்ந்து, சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தையடுத்து, நேற்று வனவர் பன்னீர்செல்வம், வன காப்பாளர் ஞானசேகரன், ஸ்டாலின் ஆகியோர் முதலையை மீட்டு சிதம்பரம் அடுத்த வக்காரமாரி ஏரியில் விட்டனர்.
மேலும்
-
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!
-
அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
-
பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்
-
சோபியானில் மீண்டும் துப்பாக்கிச்சத்தம்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்