மணலுார்பேட்டை நுாலகத்தில் மாதிரி போட்டித் தேர்வு

திருக்கோவிலுார்; மணலுார்பேட்டை கிளை நுாலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான மாதிரி தேர்வு துவக்க நிகழ்ச்சி நடந்தது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு என மணலுார்பேட்டை கிளை நுாலகத்தில் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இவர்களுக்கான மாதிரி போட்டித் தேர்வை வாசகர் வட்ட குழு மற்றும் அரிமா சங்கம் இணைந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வரும் ஜூலை 5ம் தேதி வரை நடத்த உள்ளது.

இதற்கான துவக்க நிகழ்ச்சி நுாலக வளாகத்தில் நடந்தது. வாசகர் வட்டக் குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார்.

அரிமா சங்கத் தலைவர் சரவணன் மாதிரி வினாத்தாள்களை வழங்கி மாதிரி போட்டி தேர்வை துவக்கி வைத்தார்.

அரிமா சங்க செயலாளர் பெருமாள், பொருளாளர் முனியன், மாவட்ட தலைவர்கள் அம்மு ரவிச்சந்திரன், ஜெய்கணேஷ், பாலாஜி பூபதி, ரவிச்சந்திரன், முருகன், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர். நுாலகர் அன்பழகன் நன்றி கூறினார்.

Advertisement