வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி

ரிஷிவந்தியம் : வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் 299 மனுக்கள் பெறப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ராஜலட்சுமி, நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் கதிரவன், தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் சிவக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அன்பழகன் (வேளாண்மை), தாசில்தார் வெங்கடேசன், பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகநாதன் முன்னிலை வகித்தனர்.
முகாமில், பட்டா மாற்றம், நிலம் அளவீடு, முதியோர் உதவித்தொகை, மின் இணைப்பு சான்று உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். 299 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், 68 மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 231 மனுக்கள் பரிசீலினைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கலெக்டர் பிரசாந்த் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, விசாரித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்தார்.தொடர்ந்து, கலெக்டர் பிரசாந்த் கூறுகையில், 'மனுக்கள் மீது அனைத்து துறை அதிகாரிகளும் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலம் தொடர்பாக பெறப்படும் மனுக்களை வி.ஏ.ஓ.,க்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து, தீர்வு காண வேண்டும். இன்று 13ம் தேதி வடபொன்பரப்பி குறுவட்டத்திற்கும், 14, 15ம் தேதி அரியலுார் குறுவட்டம், 16, 19ம் தேதி ரிஷிவந்தியம் குறுவட்டம், 20, 21ம் தேதி மணலுார்பேட்டை குறுவட்டத்திற்கும் ஜமாபந்தி நடக்கிறது.
பொதுமக்கள் ஜமாபந்தியில் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுவை அளித்து பயன்பெறலாம்' என்றார்.
மேலும்
-
அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
-
பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்
-
சோபியானில் மீண்டும் துப்பாக்கிச்சத்தம்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல்; மே 19ல் பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!