தி.மு.க., பொதுக்கூட்டம்

இளையான்குடி : இளையான்குடியில் வடக்கு ஒன்றிய, நகர தி.மு.க., சார்பில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சாலையூர் புறவழிச்சாலையில் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியரசன் தலைமையில் நடந்தது.

நகர் செயலாளர் நஜூமுதீன், பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார் முன்னிலை வகித்தனர். பேச்சாளர்கள் சிங்காரவேலன், நவீன், எம்.எல்.ஏ., தமிழரசி பேசினர்.

மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து வரவேற்றார். மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மு. முருகானந்தம், கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் தமிழரசன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் புலிக்குட்டி, இளைஞரணிபைரோஸ்கான் பங்கேற்றனர்.

Advertisement