கண்ணகி கோயிலை தமிழக அரசு எடுக்க வேண்டும் -பா.ஜ., பெருங்கோட்ட பொறுப்பாளர் வலியுறுத்தல்
கூடலுார் : தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலின் முழுக் கட்டுப்பாட்டை தமிழக அரசு எடுக்க வேண்டும் என கோயிலுக்கு சென்ற பா.ஜ., மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் தெரிவித்தார்.
அவர் கூறும்போது:
இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலான பக்தர்கள் கண்ணகி கோயிலுக்கு வந்தனர்.
குமுளியில் இருந்து கோயிலுக்கு செல்லும் வாகனங்களை அதிகப்படுத்தாததால் பல முறைகேடுகள் நடந்தது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கினர்.
விழா ஏற்பாட்டில் தமிழக கேரள மாநிலங்களின் கூட்டு நடவடிக்கையில் பல குறைபாடு இருந்தது. பக்தர்களுக்கு வழங்கிய உணவு கெட்டுவிட்டது. இதனால் பலர் உணவு கிடைக்காமல் திரும்பினர்.
கோயிலை புனரமைத்து தமிழக வனப்பகுதி பளியன்குடி வழியாக பாதை ஏற்படுத்தி மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று கோயிலை வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கோயிலின் முழு கட்டுப்பாட்டையும் தமிழக அரசு எடுக்க வேண்டும், என்றார்.
மேலும்
-
அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
-
பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்
-
சோபியானில் மீண்டும் துப்பாக்கிச்சத்தம்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல்; மே 19ல் பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!