ஓடக்கரை காளியம்மன் கோயில் பொங்கல் விழா

திருப்புல்லாணி : திருப்புல்லாணியில் உள்ள ஓடக்கரை காளியம்மன் கோயிலில் திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற பொன்னாங்கழிக்கானல் நீரோடை அருகே உள்ளது. பொங்கல் விழாவை முன்னிட்டு மூலவருக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பெண்கள் பொங்கலிட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் பூத்தட்டு ஊர்வலம் ஓம்சக்தி மன்றத்தில் இருந்து புறப்பட்டது. இரவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

ஏற்பாடுகளை கோயில் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.

Advertisement