சின்னமனுார் பைபாசில் இறைச்சி கழிவுகள்

கம்பம் : தமிழக கேரள எல்லை யோரங்களில் கேரளாவை சேர்ந்தவர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டுவது வாடிக்கையாக இருந்தது.

தமிழக அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக தற்போது மருத்துவ கழிவுகள் கொட்டுவது குறைந்து விட்டது. இந்நிலையில் சின்னமனூர். பைபாஸ் ரோட்டில் இறைச்சி கழிவுகள் கொட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால் பைபாஸ் ரோட்டில் செல்லும் வாகன ஒட்டிகளும், விவசாயிகள், நடைப்பயிற்சி செய்பவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement