பெங்களூரு வழியாக அபுதாபி - திருச்சி விமான சேவை

சென்னை:திருச்சியில் இருந்து அபுதாபிக்கு திங்கள், புதன், சனிக்கிழமை என, வாரத்திற்கு மூன்று நாள் நேரடி விமான சேவையை, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனம் வழங்கி வருகிறது.

தற்போது, அபுதாபியில் இருந்து பெங்களூரு வழியாக திருச்சிக்கு, இணைப்பு விமான சேவையை, ஜூன் 1 முதல் துவங்க திட்டமிட்டுள்ளது.

அதன்படி அபுதாபியில் தினசரி இரவு, 10:00 மணிக்கு புறப்படும் விமானம், அதிகாலை 3:30 மணிக்கு பெங்களூரு வந்தடையும். அங்கிருந்து காலை, 7:25 மணிக்கு புறப்பட்டு, 8:25க்கு திருச்சி வந்தடையும்.

கூடுதல் விபரங்களை, airindiaexpress.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement