பணி முடிந்த இடங்களில் சாலை அமைக்க வேண்டும்

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. திட்டப் பணிகள் முடியாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். பணி முடிந்த இடத்தில் புதிதாக தார் சாலை அமைக்கவில்லை. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. பணி முடிந்த இடங்களில் புதிய தார் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை இணைப்பை நகராட்சி விரைந்து கொடுக்க வேண்டும். பொது மக்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எத்திராஜ்,

விழுப்புரம் வடக்கு மாவட்ட

பா.ஜ., பொதுச் செயலாளர்.

Advertisement