சாலை அகலப்படுத்தும் பணியை அமைச்சர் ஆய்வு
சென்னிமலை, சென்னிமலை யூனியன் வெள்ளோடு கள்ளுக்கடைமேடு பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், 7 கோடி ரூபாய் மதிப்பில், ஈரோடு - சென்னிமலை சாலை முழுவதும் வெள்ளோடு நகரப் பகுதியில் அகலப்படுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் சிறுபாலம் திரும்ப கட்டுதல், குழாய் பாலம் அகலப்படுத்துதல், பாதுகாப்பு சுவர் கட்டுதல், நடைபாதையுடன் கூடிய வடிகால் கட்டுதல் பணி நடந்து வருகிறது. இவற்றை வீட்டுவசதி, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அமைச்சருடன் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.,க்கள் திருச்செங்கோடு ஈஸ்வரன், ஈரோடு கிழக்கு சந்திரகுமார் உள்ளிட்டோர் சென்றனர்.
* சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பாக, வெள்ளோட்டில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன் தலைமையில், அமைச்சர் முத்தசாமி திறந்து வைத்து மக்களுக்கு நீர், மோர், வெள்ளரி பிஞ்சு வழங்கினார்.
மேலும்
-
திருக்கோஷ்டியூரில் பிரமோற்ஸவம் நிறைவு
-
அதிகரிப்பு
-
உளவு பார்த்ததாக புகார் பாக்., அதிகாரி வெளியேற்றம்
-
9ம் வகுப்பு மாணவன் குத்தி கொலை: சிறுவன் கொடூரம்
-
பல லட்சம் கோடி முதலீடு திரட்ட அமெரிக்க அதிபர் சவுதியில் முகாம்
-
ஆதம்பூர் தளம் அழிப்பு என்ற பாக்., பொய் பிரசாரம்... முறியடிப்பு! நேரில் சென்று வீரர்களை சந்தித்து மோடி நிரூபணம்