வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

திருமங்கலம் : கேரளா மட்டுமின்றி திண்டுக்கல், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமங்கலம் - ராஜபாளையம் ரோடு ஆலம்பட்டி, சேடப்பட்டி பிரிவு பகுதியில் குற்றப்பிரிவு எஸ்.ஐ., மாரிக்கண்ணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் டூவீலரில் வந்த நபர்களை நிறுத்தி விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.
அவர்களிடம் விசாரிக்க முற்பட்டபோது செல்லுார் மேல தோப்பு கன்னுார்பிரதாப் 22, தப்பி ஓட முயன்றதில் கீழே விழுந்ததில் காலில் காயமடைந்தார். அவர்களிடம் போலீசார் மேல் விசாரணை நடத்திய போது மேலும் மூவர் மதுரை முனிச்சாலையை சேர்ந்த ரெங்கராஜ் 20, பழங்காநத்தம் கோவலன் நகரை சேர்ந்த யோகராஜ் 26, மதுரை ரசாயன பட்டறை தெருவை சேர்ந்த ராஜபாண்டி 21, என்பதும், நால்வரும் கேரள மாநிலம் மட்டுமின்றி மதுரை மாவட்டம் திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர் மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரிய வந்தது.
நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 6 டூவீலர்கள், 4 அலைபேசிகள், 3 பவுன் தங்க செயின், ஒரு வெள்ளி செயின், 2 கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
காயமடைந்த கன்னுார் பிரதாப், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இவர்களை கைது செய்த போலீசாரை எஸ்.பி., அரவிந்தன், ஏ.எஸ்.பி., அன்சுல் நாகர், இன்ஸ்பெக்டர் சுப்பையா பாராட்டினர்.
மேலும்
-
பெயரை மாற்றினாலும் உண்மை நிலையை மாற்ற முடியாது; சீனாவுக்கு இந்தியா 'சுளீர்'
-
ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை; கல்வித்துறை அறிவிப்பு
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் கவாய்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.70,440!
-
பொள்ளாச்சி வழக்கில் நான் சொன்னது நடந்திருக்கிறது: தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு
-
காலிமனை வாங்கும் போது அதன் அளவுகள் விஷயத்தில் ஏமாறாமல் இருக்க என்ன செய்வது?