பெயரை மாற்றினாலும் உண்மை நிலையை மாற்ற முடியாது; சீனாவுக்கு இந்தியா 'சுளீர்'

புதுடில்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் பல இடங்களின் பெயரை மாற்ற சீனா மேற்கொண்ட முயற்சியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.
இந்தியா - சீனா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவை சீண்டிப் பார்க்கும் வகையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு, தன் மொழியில் பெயர்களை சூட்டியது சீனா.
அருணாச்சல பிரதேசத்தை, ஜாங்னான் என்று பெயரிட்டு சீனா அழைத்து வருகிறது. அங்குள்ள ஆறு இடங்களுக்கு, 2017ல் புதிய பெயரை சூட்டியது. அதைத் தொடர்ந்து, 2021ல் 15 இடங்கள், 2023ல் 11 இடங்களுக்கு புதிய பெயர் சூட்டியது.
தற்போது மீண்டும் அருணாச்சலப் பிரதேசத்தில் பல இடங்களின் பெயரை மாற்ற சீனா முயற்சித்து வருகிறது. இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் பல இடங்களின் பெயரை மாற்ற சீனா மேற்கொண்ட முயற்சியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்குப் பெயரிட சீனா தொடர்ந்து வீண் மற்றும் அபத்தமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
எங்கள் கொள்கை ரீதியான நிலைப்பாட்டிற்கு இணங்க, அத்தகைய முயற்சிகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது. பெயரை மாற்றினாலும், உண்மையான யதார்த்தத்தை சீனா மாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





மேலும்
-
'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
-
சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
-
பஹல்காம் வேட்டையின் அடுத்த இலக்கு: தேடப்படும் 11 பயங்கரவாதிகள் இவர்கள்தான்!
-
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது அமைச்சரவைக் குழு கூட்டம்!
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!