தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.70,440!

1


சென்னை: சென்னையில் இன்று (மே 14) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.70,440க்கு விற்பனை ஆகிறது.



தமிழகத்தில் நேற்று முன்தினம் (மே12) ஆபரண தங்கம் கிராம், 8,750 ரூபாய்க்கும், சவரன், 70,000 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (மே 13) காலை, தங்கம் விலை கிராமுக்கு, 15 ரூபாய் உயர்ந்து, 8,765 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 120 ரூபாய் அதிகரித்து, 70,120 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


தொடர்ந்து இரண்டாவது நாளாக, நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. தங்கம் கிராமுக்கு, 90 ரூபாய் அதிகரித்து, 8,855 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 720 ரூபாய் உயர்ந்து, 70,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு, 840 ரூபாய் அதிகரித்தது.



இந்நிலையில், இன்று (மே 14) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.70,440க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,805க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று சரிந்துள்ளது.

Advertisement