ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை; கல்வித்துறை அறிவிப்பு

ஸ்ரீநகர்; ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு எவ்வித முன் அறிவிப்பும் இன்றி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு, ரஜௌரி, பூஞ்ச் மற்றும் சம்பா ஆகிய மாவட்டங்களில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று இயங்காது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
அந்த அறிவிப்பில் வேறு எந்த சிறப்பு காரணம் உள்ளதா என எதுவும் குறிப்பிடப்படவில்லை. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இந்த விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் உதம்பூர் மாவட்டம், பனி, பாஷோலி, மகன்பூர். பட்டு, மல்ஹார் மற்றும் கதுவா மாவட்டத்ததில் உள்ள பில்லாவார் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் இன்று (மே 14) இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.

மேலும்
-
சென்னையில் சுற்றித்திரியும் 1.80 லட்சம் தெருநாய்கள்; மைக்ரோசிப் பொருத்தும் நடவடிக்கை துவக்கம்
-
மனை அங்கீகாரத்துக்கு ரூ.6,000 லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் நகர் ஊரமைப்பு உதவியாளர்!
-
காஷ்மீரில் வெடிக்காத பாக்., குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் ராணுவம் தீவிரம்!
-
'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
-
சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
-
பஹல்காம் வேட்டையின் அடுத்த இலக்கு: தேடப்படும் 11 பயங்கரவாதிகள் இவர்கள்தான்!