ஏ.ஜே.கே., கல்லுாரியில் புத்தாக்க வளர் மையம்

கோவை; ஏ.ஜே.கே., கலை, அறிவியல் கல்லுாரியில் ஏ.ஜே.கே., புத்தாக்க வளர் மையம்(இன்னோவேஷன் இன்குபேட்டர் பவுண்டேஷன்) துவங்கப்பட்டது.

புதிய மையம், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை மாற்றத்தை உருவாக்குபவர்களுக்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளது. மாணவர்களின் புதிய யோசனைகளை வாணிபமாக மாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. வழிகாட்டுதலில் துவங்கி சந்தை வரை அனைத்து விபரங்களையும், மாணவர்கள் ஒரே கூரையின் கீழ், தெரிந்து கொள்ள முடியும். புதிய படைப்புகள் குறித்த அனைத்து தகவல்களையும், www.ajkcas.ac.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

மையத்தை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் கிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஏ.ஜே.கே., கலை, அறியவியல் கல்லுாரி செயலாளர் அஜீத்குமார் லால் மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement